உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களிடம்
இருந்து மாபெரும் ஆர்டர்களைப் பெறுவதிலேயே இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்
போன்ற இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது முழு
கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ரூ. 80,000 கோடி சந்தை
கொண்ட இந்தியாவின் நடுத்தர, சிறிய நிறுவனங்களுக்கு தனது தொழில்நுட்ப
சேவையை வழங்கி அந்த சந்தையை வளைத்துப் போடுவதில் கூகுள் நிறுவனம்
தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.இந்தியாவில் இதுவரை சுமார் 1,000 நிறுவனங்கள் கூகுளின் சேவைகளைப்
பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனங்கள் எல்லாமே இந்திய சாப்ட்வேர்
நிறுவனங்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவை ஆகும்.அமெரிக்கா, ஐரோப்பா, இப்போது வளைகுடா நாடுகள் பக்கமே இந்தியாவின்
முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் வழக்கமாக கவனம் செலுத்துகின்றன. பொதுவாக
உள்நாட்டு சந்தையை அவை மதிப்பதே இல்லை.இந் நிலையில், இந்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான
தொழில்நுட்ப சேவைகளை கூகுள் வழங்க ஆரம்பித்துள்ளது. கூகுள் சேவைகளை
பயன்படுத்தும் நிறுவனங்களில் வோல்டாஸ், யெபி, நீல்கமல், ஹிராநந்தனி,
இன்டியா இன்போலைன் போன்றவை முக்கியமான நிறுவனங்களாகும்.வேர்ட் பிராஸஸிங், இமெயில் சேவை, தரவுகள் (டேட்டா) சேமிப்பு உள்பட
தன்னிடம் உள்ள எல்லா வகையான சேவைகளையும் கூகுள் இவர்களுக்கு வழங்குகிறது.இவர்களை குறி வைக்க என ‘India, Get Your Business Online’ என்ற புதிய
விற்பனைத் திட்டத்தையும் தொடங்கி, தனது மார்க்கெட்டிங் டீமை முழுமையாக
களமிறக்கி விட்டுள்ளது கூகுள்.இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 50,000 நடுத்தர, சிறிய தொழில்
நிறுவனங்களை தனது வலையில் இழுத்துவிட்ட கூகுள், இவர்களுக்கு இலவச
கூப்பனையும் வழங்குகிறது. இதை வைத்து கூகுள் இணையத்தளத்தில் தங்களது
நிறுவனத்தையும் பொருட்களையும் இவர்கள் இலவசமாக விளம்பரம் செய்யும்
அனுமதிக்கிறது.2014ம் ஆண்டுக்கள் 5 லட்சம் இந்திய தொழில் நிறுவனங்களை தனது சேவைக்குள் கொண்டு வருவது கூகுளின் திட்டமாம்.
No comments:
Post a Comment