Monday, September 10, 2012

history of facebook


நாம் பேஸ்புக்கில் நீண்ட நேரத்தை செலவிடுகிறோம். இருந்தாலும் டேவிட் கிர்க்பெட்ரிக்ஸ் இன் The Facebook Effect என்னும் புத்தகத்தை வாசிக்கும் வரை பேஸ்புக் கம்பனி குறித்த பல விடயங்கள் நமக்குத் தெரியாது போகும். இந்தப் புத்தகத்தில் பேஸ்புக் குறித்த முழு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கின் முதலாவது வெளி முதலீட்டாளர் பீட்டர் தியல் 2009ஆம் ஆண்டு இவரது பங்கில் பாதியை ரஸ்யாவின் DST நிறுவனமொன்றிற்று விற்றார்.
பேஸ்புக்கின் முன்னாள் தலைவரான சீன் பீக்கர் கொக்கைன் தொடர்பான வழக்கில் வட கரோலினாவில் கைது செய்யப்பட்டதையடுத்து அவரை பங்குதாரர்கள் பேஸ்புக் முகாமைத்துவத்திலிருந்து வெளியேற்றினார்கள்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேஸ்புக் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் FacebookHigh.com இனை ஆரம்பிக்க பேஸ்புக் திட்டமிட்டது. அந்த டொமைன் மிக அதிக விலையானதாக இருந்தது.
2006ஆம் ஆண்டு கிறிஸ் புட்னம் என்னும் நபர் பேஸ்புக்கினை ஹேக் (இணையத் திருட்டு) செய்து  MySpace ப்ரபைல்கள் போன்ற ஆயிரக்கணக்கான ப்ரபைல்களை உருவாக்கினார். பேஸ்புக் அவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டது.
பேஸ்புக்கின் முதல் கோடைகாலத்தில் சக்கர்பேர்க் மற்றும் அவரது குடும்பத்தினர் 85,000 டொலர்களை கம்பனி பணத்திலிருந்து செலவிட்டனர்.
ஸ்தாபகரான ரெய்ட் ஹொப்மேன் மற்றும் சிங்கா மார்க் பின்கஸ் ஆகியோர் சில முக்கியமான சமூகத் தள வடிவங்களுக்கு சொந்தக் காரர்கள். எனவே தான் அவர்கள் பேஸ்புக்கின் சில கையிருப்புகளுக்கும் சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள்.
ஒரு கட்டத்தில் பேஸ்புக் விளம்பரத் தயாரிப்புகளுக்கு கூகுள் அட்சென்சைப் போன்று தன்னுடைய அட்சீட் ஐ அமைக்கத் திட்டமிட்டது.
2005ஆம் ஆண்டு Accel பங்குதாரரான ஜிம் பிரெயர் பேஸ்புக்கில் 12.7 மில்லியன் டொலர்களை முதலீடு செய்த போது மார்க் சக்கர்பேர்க், சீன் பார்க்கர் மற்றும் டஸ்ரின் மொஸ்கோவிட்ஸ் ஆகியோர் ஒவ்வொருவரும் 1 மில்லியன் டொலரினை போனஸ் தொகையாக எடுத்துக்கொண்டனர்.
You Tube இனை ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னால் வரை ஸ்டீவ் சென் பேஸ்புக்கில் பணியாற்றினார்.
Facebook.com என்னும் டொமைனை வாங்குவதற்கு பேஸ்புக் 200,000 டொலர்களை செலவிட்டது.
பேஸ்புக்கில் புகைப்படப் பகிர்வை இணைக்க மார்க் சக்கர்பேர்க் முதலில் விரும்பவில்லை. ஆனால், சீன் பேர்க்கர் அவரை சமாதானப்படுத்தி புகைப்படப் பகிர்வை ஆரம்பித்தார்கள். தற்போது இது பேஸ்புக்கில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
முதல் பேஸ்புக் புகைப்பட மேலேற்றம் (upload) ஒரு கார்ட்டூன் பூனையின் படமாகத் தான் இருந்தது. அதன் பின்னர் பெருமளவான பெண்களின் படங்கள் மேலேற்றப்பட்டன. (upload செய்யப்பட்டன).
சக்கர்பேர்க் 2005ஆம் ஆண்டு ‘ CEO lessons” ஐ எடுத்துக்கொண்டார்.
News Feed ற்கு முன்னர் யாராவது அவர்களுடைய ப்ரபைல் படத்தினை மாற்றம் செய்தால் அது 25 புதிய பக்கங்களைக் காட்ட காரணமாக அமையும்.
பேஸ்புக் New Feed செய்த முதல் தடவை அதற்குக் கிடைத்த பதில் மொழி ‘Turn this shit off” என்பது தான்!
Flickr மற்றும் Hunch இன் துணை ஸ்தாபகரான கேட்ரினா பேக்கினால் பேஸ்புக்கில் இணைந்துகொள்ள முடியவில்லை. காரணம் பேஸ்புக் அவருடைய பெயரைப் பொய்யானது (fake) என நினைத்துக் கொண்டது.
பேஸ்புக் மைக்ரோசொப்டிற்கு தனது சம்பாதிப்புக்கள் குறித்து முதலில் தெரிவிக்காமல் கூகுளிற்கு தெரிவிக்க முடியாது.
ஆசியா முழுதும் உத்தியோகப்பூர்வ face book phone  உள்ளது.

2008ஆம் ஆண்டு மீள் வடிவமைத்ததற்குப் பிறகு,”New Facebook” ற்கு எதிரான முறைப்பாட்டில் Dell  இன் CEO  மைக்கேல் டெல் கூட இணைந்து கொண்டார்.
பேஸ்புக் விளம்பர இணையத்தளம் ஒன்றினை ஆரம்பிக்க இருப்பதாக அதன் துணை ஸ்தாபகரான டஸ்ரின் மொஸ்கோவிட்ஸ் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் வேலை செய்பவர்களுடைய சராசரி வயது 31 ஆகும்.

No comments:

Post a Comment